சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது..!
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. நெற்றிப்பொட்டில் துப்பாக்கி குண்டு உடன் தலையிலிருந்து ரத்தம் வழிய சிம்பு தொழுகையில் ஈடுபடுவது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அரசியலை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில் கல்யாணி, பாரதிராஜா, எஸ்.ஜே சூர்யா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.






