வரும் 24ஆம் தேதி தமிழக மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..!
வரும் 24ஆம் தேதி கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் மதுரை, தேனி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் ஏனைய பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளையும், நாளை மறுநாளும் இராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் லேசான மழையும் மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
23ஆம் தேதி நாகை, தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழையும் ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
24ஆம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கன மழையும் ஏனைய கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும் உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிக வெப்ப நிலையாக 32 டிகிரி செல்சியசும் குறைந்த பட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.






