--- --:--:-- --

தமிழகத்தில் இன்று 2184 பேருக்கு கொரோனா பாதிப்பு..!28 பேர் உயிரிழப்பு…!

13

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் 2184 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பும் 28 ஆக பதிவாகியுள்ளது. சென்னையிலும் தினசரி தொற்று பாதிப்பு குறைந்து 571 ஆக பதிவாகியுள்ளது.

 

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாகவே கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் , உயிரிழப்பும் படிப்படியாகவே குறைந்து வருகிறது. இன்றைய நிலவரம் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2184 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7.5 லட்சத்தை கடந்துள்ளது.

 

தமிழகத்தில் இன்று உயிரிழப்பு சற்று உயர்ந்து 20-க்கு 28 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 415 ஆக அதிகரித்துள்ளது.

 

தமிழகத்தில் இன்று கொரோனா சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 2210 ஆகும்.இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7, 20, 339 ஆக உயர்ந்துள்ளது.

 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் சராசரி 92% மேல் உள்ளது. தமிழகத்தில் தற்போது 18, 655 பேர் மட்டுமே கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து, இன்றும் 600-க்கு கீழாக 571 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon