--- --:--:-- --

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : 2341 பேருக்கு பாதிப்பு..! 25 பேர் உயிரிழப்பு ..! குணமடைந்தவர்கள் 2352 பேர்!!

coronavirus78-1598673049-1603986419

மிழகத்தில் இன்று ஒரே நாளில் 2341 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் 2352 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவது பெரும் ஆறுதலான விஷயமாக உள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2341 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 41 ஆயிரத்து 488 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழ்ந்தவர்கள் எண்ணிக்கை 25 ஆகும். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 11 ஆயிரத்து 324 ஆக உயர்ந்துள்ளது. இன்று குணமடைந்து வீடு திரும்பியோர் 2352 பேர் ஆவர். இன்னும் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 18,966 பேர் மட்டுமே ஆவர்.

 

சென்னையில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று 603 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. அடுத்து கோவையில் 213, திருவள்ளுர் 137, திருப்பூர் 114, ஈரோடு 108, சேலம்106, செங்கல்பட்டு 112 என இந்த மாவட்டங்களில் மட்டும் இன்று தொற்று பாதிப்பு நூறுக்கும் மேலாக பதிவாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon