ஆன்லைன் வகுப்பின் போது திடீரென வெளியான ஆபாசப்படம்..! ஆசிரியர், மாணவர் அதிர்ச்சி..!
ஆன்லைன் வகுப்பின் போது வெளியான ஆபாச வீடியோக்களால் ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வைரஸ் தொற்று பரவ தொடங்கிய மார்ச் மாதத்திலிருந்து நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்ல முடியாத நிலையில் அவர்களுக்கு ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் எடப்பாள் என்ற இடத்தில் தனியார் பள்ளியில் ஜும் செயலி ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர் ஆன்லைனில் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது ஆன்லைன் ஸ்ட்ரீமிங்க்குள் புகுந்த மர்ம நபர்கள் ஆபாச வீடியோக்களை ஒளி பரப்பியதாகத் தெரிகிறது. இதனால் ஆசிரியர் பதற்றமடைந்ததால் வகுப்பு நிறுத்தப்பட்டது. இதேபோல் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் வாட்ஸ்அப் குழுவில் ஊடுருவிய மர்ம நபர்கள் சிலர் தொடர்ச்சியாக ஆபாச படங்கள் மற்றும் ஆபாச வீடியோக்களை பதிவிட தொடங்கியதாக சொல்லப்படுகிறது.
இந்த சம்பவங்கள் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





