--- --:--:-- --

கொரோனா தடுப்பு மருந்தின் மூன்றாவது கட்ட பரிசோதனைக்கு அனுமதி..!

7.1

பாரத் பயோடெக் நிறுவனத்தில் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்தின் மூன்றாவது கட்ட பரிசோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரொனாவுக்கான கோவாக்சின் தடுப்பு மருந்தை ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து வருகிறது.

 

இந்த நிறுவனம் தடுப்பு மருந்தின் மூன்றாவது கட்ட பரிசோதனைக்கு அனுமதி அளிக்கும்படி விண்ணப்பம் செய்து இருந்தது. அதில் டெல்லி, மும்பை, லக்னோ உட்பட நாடு முழுவதும் உள்ள 10 மாநிலங்களில் 18 வயது நிரம்பிய 28,500 பேரிடம் மூன்றாவது கட்ட பரிசோதனை நடத்த திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த இந்திய மருந்துகள் தயாரிப்பு கட்டுப்பாட்டு தலைமையகம் பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.

 

பாரத் பயோடெக் நிறுவனத்தைத் தவிர ஜெயிடஸ் கெடில்லா இடையிலான நிறுவனம் தயாரித்திருக்கும் கொரொனா தடுப்பு மருந்து இரண்டாம் கட்ட பரிசோதனையில், நிறுவனத்தின் மருந்து மூன்றாவது கட்ட பரிசோதனையிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon