ஒரு மணி நேரம் கொட்டித் தீர்த்த கனமழையால் தத்தளித்த சென்னை.. அடுத்து பெருமழை பெய்தால் தாக்குப் பிடிக்குமா?
?????????????????????????????????????????????????????????
சென்னை முழுவதும் மற்றும் சுற்றுப் பகுதிகளில் இன்று மாலை ஒரு மணி நேரமாக கனமழை கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்த்து. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக சென்னை தத்தளித்த நிலையில், இந்த மழைக்காலத்தில் தொடர் கனமழை பெய்தால் சென்னை தாக்குப் பிடிக்குமா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவ மழை தொடங்கவுள்ள நிலையில், சென்னையில் கடந்த ஒரு வாரமாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இன்று மாலை 3 மணிக்கு மேல் சென்னையின் அனைத்து பகுதிகளிலுமே கனமழை கொட்டியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்த இந்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். பல வாகனங்கள் நீரில் மூழ்கின. தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்தது. சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனைக்குள் வெள்ள நீர் புகுந்தது.
ஒரு மணி நேரத்தில் மட்டும் சென்னையில் 6 செ.மீ. மழை பதிவானது. ஒட்டு மொத்த சென்னை முழுவதும் மட்டுமின்றி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. இந்த ஒரு மழைக்கே சென்னை மாநகரம் தத்தளித்த நிலையில், இந்த மழைக்காலத்தில் அடுத்தடுத்து கன மழை பெய்தால் தாக்குப் பிடிக்குமா? என்ற அச்சத்தில் சென்னை வாசிகள் உள்ளனர்.






