காட்டு யானைகள் வாகனங்களை துரத்தி வந்ததால் போக்குவரத்து தடை..!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் காட்டு யானைகள் வாகனங்களை துரத்தி வந்ததால் போக்குவரத்து தடைபட்டது. கோத்தகிரி மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையின் குறுக்கே வெகுநேரமாக காட்டுயானைகள் நின்றதால் வாகன ஓட்டிகள் ஹாரன் மூலம் ஒலி எழுப்பினர்.
இதனால் ஆத்திரமடைந்த யானைகள் வாகனங்களை துரத்த தொடங்கியதால் ஓட்டுநர்கள் வாகனங்களுடன் பின் வாங்கினர். ஒரு மணி நேரம் சாலையில் யானைகள் பின்னர் வனப்பகுதிக்கு சென்றதும்
வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.






