--- --:--:-- --

ஸ்டெர்லைட் ஆலைக்குள் நிர்வாகத்தினரை அனுமதிக்க வேண்டியதில்லை

7

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள நிர்வாகத்தினருக்கு அனுமதி அளிக்க வேண்டியதில்லை என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிக்காக இடைக்கால அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

 

அதில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எந்த இடைக்கால நிவாரணம் வழங்க தேவையில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இடைக்கால அனுமதி தொடர்பாக நீதிமன்றம் இதுவரை எந்தவித உத்தரவு பிறப்பித்தது இல்லை என்றும் ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசின் குழு ஆய்வு செய்தது எந்த அபாயமும் இல்லை எனவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எனவே பராமரிப்பு பணியை காரணம் காட்டி ஆலைக்குள் நிர்வாகத்தினரை அனுமதிக்க வேண்டியதில்லை எனவும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon