--- --:--:-- --
8

கும்பகோணம் கிளாட் நகரை சேர்ந்தவர் வழக்கறிஞர் காமராஜ் இவர் உடல்நலம் இல்லாத தனது தந்தையுடன் மருத்துவமனையில் இருந்து நேற்று மாலை இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வரும் வழியில் மறைந்திருந்த மர்ம நபர்கள் திடீரென காமராஜரை வழிமறித்து சரமாரியாக வெட்டினார்.

 

இதில் காமராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரது தந்தை பார்த்திபன் காயமின்றி உயிர் தப்பினார். இதனிடையே இதே கும்பலை சேர்ந்த சிலர் காமராஜன் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு இருந்த அவரது நண்பர் சக்திவேலை வெட்டியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

 

கொலையாளிகளை கைது செய்யக் கோரி வழக்கறிஞர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இந்த கொலைகள் தொடர்பாக வழக்கு பதிவு செய்த நாச்சியார்கோவில் போலீசார் 8 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.

 

காமராஜரும் உறவினர்களுக்கும் இடையே 15 ஆண்டுகளாக சொத்து பிரச்சினை இருந்து வருவதாக கூறப் படுவதால் இதன் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Leave a Reply

Right Menu Icon