சாலைகளில் நடந்து சென்று மக்களிடம் குறைகளை கேட்டறியும் காவல்துறை..!
சென்னை ராயப்பேட்டையில் உள்ள பாலாஜி நகர், பி எம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை நடந்தே சென்று மக்களின் கோரிக்கைகள் பிரச்சினைகளை தீர்த்து மீண்டும் நடந்து சென்று கொண்டிருப்பதை தமிழ்நாடு காவல் துறை அறிமுகம் செய்துள்ளது.
உதவி ஆணையர் தலைமையிலான காவல்துறையினர் வீதிகளில் நடந்தே சென்று மக்கள் மற்றும் வியாபாரிகள் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.
நகரம், கிராமங்களில் நிலவும் கள நிலவரத்தை அறிந்து கொள்ளவும் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையிலும் போலீஸ் உடையில் நடந்து சென்று குறைகளை காணுவது பயனுள்ளதாக இருக்கும் என்று மூத்த காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.







