அதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழா…கட்சி அலுவலகத்தில் கொடியேற்றிய ஓபிஎஸ்…சொந்த ஊரில் கொண்டாடிய முதல்வர் இபிஎஸ்
அதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழாவை அக்கட்சியினர் இன்று உற்சாகமாக கொண்டாடுகின்றனர். கட்சி தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கொடியேற்றினார். முதல்வர் எடப்பாடி தனது சொந்த ஊரான சேலம் சிலுவம்பாளையத்தில் அதிமுக கொடியேற்றி வெத்தார்.
திமுகவில் இருந்து பிரிந்த எம்.ஜி.ஆர். 1972-ம் ஆண்டு இதே நாளில் அதிமுகவை தொடங்கினார். இதனால் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளை அதிமுக தொடக்க தின விழாவாக கட்சியினர் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக 7 முறை தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றி சாதனை படைத்து வரும் நிலையில் இன்று 49-வது ஆண்டில் அதிமுக காலடி எடுத்து வைக்கிறது. இந்த நாளை அதிமுகவைச் சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
பொதுவாக அதிமுக தலைமை அலுவலகத்தில் ந
டைபெறும் விழாவில் பங்கேற்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவருடைய தாயார் மறைவு காரணமாக சொந்த ஊரான சேலம் சிலுவம்பாளையத்தில் தங்கியுள்ள அவர் அதிமுக துவக்க தின விழாவை அங்கேயே கொண்டாடினார். அதிமுக கொடியேற்றிய அவர், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கொடியேற்றி வைத்தார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கும் மாலை அணிவித்து இனிப்புகளையும் வழங்கினார். இதே போல் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் மாவட்ட கட்சி அலுவலகங்களில் அதிமுக கொடிகளை ஏற்றியும், இனிப்புகள் வழங்கியும் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க தினத்தை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
அடுத்த ஆண்டு அதிமுகவின் பொன்விழா கொண்டாட்டங்கள் நடைபெற உள்ள நிலையில், இன்று 49 வது ஆண்டு தொடக்க தினத்தை முன்னிட்டு ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், பொன் விழா ஆண்டிலும் அதிமுக ஆட்சியை பிடித்து சாதனை படைக்கும் என்று தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.






டைபெறும் விழாவில் பங்கேற்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவருடைய தாயார் மறைவு காரணமாக சொந்த ஊரான சேலம் சிலுவம்பாளையத்தில் தங்கியுள்ள அவர் அதிமுக துவக்க தின விழாவை அங்கேயே கொண்டாடினார். அதிமுக கொடியேற்றிய அவர், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
