--- --:--:-- --

போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக நடிகர் விவேக் ஓபராய்யின் வீட்டில் சோதனை..!

5.1

போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக பாலிவுட் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய்யின் மும்பை வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். கன்னட திரையுலகினர் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இந்த வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜீவ ராஜ் ஆல்வாவின் மகனும் நடிகர் விவேக் ஓபராயின் நெருங்கிய உறவினருமான ஆதித்யாவுக்கு தொடர்பு உள்ளதாக புகார் எழுந்தது.

 

தலைமறைவான ஆதித்யா மும்பையில் விவேக் ஓபராய் வீட்டில் மறைந்திருக்கலாம் என தகவல் வெளியானது. காவல்துறையினர் அங்கு சோதனையில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Right Menu Icon