5 பைசா நாணயத்திற்கு அரை பிளேட் பிரியாணி வழங்கல்..!
உலக உணவு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள ஒரு உணவகத்தில் 5 பைசா நாணயத்திற்கு அரை பிளேட் பிரியாணி வழங்கப்படுகிறது.
5 பைசா நாணயத்தை கொண்டு வரும் முதல் 500 வாடிக்கையாளர்களுக்கு அரை பிளேட் பிரியாணி வழங்கப்படும் என்ற உணவகத்தின் விளம்பரத்தைத் தொடர்ந்து தனிநபர் இடைவெளியை பின்பற்றி காலை முதலே காத்திருந்த மக்கள் 5 பைசா நாணயத்தை கொடுத்துவிட்டு பிரியாணியை மகிழ்ச்சியாக வாங்கி சென்றனர்.
இன்றைய தலைமுறை நாணயத்தின் மதிப்பை உணர வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு நிகழ்வு நடத்தப்பட்டதாக கடையின் உரிமையாளர் கூறியுள்ளார்.







