--- --:--:-- --

நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் நடிகைகள் புகைப்படம் கொண்டு போலி அடையாள அட்டை..!

2.1

த்திய பிரதேசத்தில் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் நடிகை தீபிகா படுகோனின் புகைப்படம் கொண்ட போலி அடையாள அட்டைகளை உருவாக்கி சிலர் முறைகேடுகளில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

 

ஜெர்னியா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடிகைகள் தீபிகா படுகோனே, ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் ஆகியோரின் புகைப்படங்கள் அடங்கிய வேலை அட்டைகளை உருவாக்கி அதிகாரிகள் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

 

100 நாள் வேலைத்திட்டத்தில் கிராம மக்களுக்கு வேலை வழங்காமலேயே அவர்களது பெயரில் போலி அட்டைகளை உருவாக்கி அவர்களது வங்கி கணக்கில் மத்திய அரசால் செலுத்தப்படும் சம்பளத் தொகையை அதிகாரிகள் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon