நடிகை சௌந்தர்யாவின் வாழ்க்கை படத்தில் சாய் பல்லவி நடிக்கிறாரா..?
மறைந்த நடிகை சௌந்தர்யாவின் வாழ்க்கை படத்தில் சாய்பல்லவி நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தவர். 2004 ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார்.
தற்போது சௌந்தர்யாவின் வாழ்க்கையை படமாக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதில் நடிக்க நடிகை சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அவர் நடிக்க சம்மதம் தெரிவித்தால் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும் என சொல்லப்பட்டுள்ளது.







