--- --:--:-- --

ஓபிசி மாணவர்களுக்கு நடப்பாண்டிலேயே இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரிய வழக்கு ஒத்திவைப்பு..!

9

ருத்துவப் படிப்புகளில் ஓபிசி மாணவர்களுக்கு நடப்பாண்டிலேயே 50 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

 

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டின் ஓபிசி மாணவர்களுக்கு அடுத்தாண்டு முதல் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

 

இந்நிலையில் ஓ‌பி‌சி மாணவர்களுக்கு நடப்பாண்டு முதல் 50 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என கூறி தமிழக அரசு மற்றும் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நடப்பு கல்வியாண்டில் மருத்துவப் படிப்புகளில் 50% மட்டுமல்ல.

 

27 சதவீத இட ஒதுக்கீடு கூட வழங்க முடியாது என மத்திய அரசு தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. நீட் தேர்வு முடிவு நாளை வெளியாக உள்ள நிலையில் இட ஒதுக்கீட்டில் மாறுதல் செய்வது குழப்பங்களை ஏற்படுத்தும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

 

இதனையடுத்து அனைத்து தரப்பையும் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon