--- --:--:-- --

அப்துல் கலாமின் 89 வது பிறந்தநாளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய குடும்பத்தார்..!

8

குடியரசு முன்னாள் தலைவர் ஏபிஜே அப்துல் கலாமின் 89 ஆவது பிறந்த நாளையொட்டி ராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் குடும்பத்தினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

 

பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் நினைவிடம் வண்ண விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதையடுத்து வளாகத்தை சுற்றி 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தொடங்கி வைத்தார்.

 

முன்னதாக கலாம் அறக்கட்டளை சார்பில் புவி பரப்பில் அமைதியான உலகை படைக்க இணைந்து செயல்படுதல் என்ற தலைப்பில் காணொலி காட்சி மூலம் நடந்த கருத்தரங்கில் புத்த மத குரு தலாய்லாமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Leave a Reply

Right Menu Icon