--- --:--:-- --

தோனியின் மகளுக்கு மிரட்டல் விடுத்த சிறுவன் கைது..!

3.1

கிரிக்கெட் வீரர் தோனியின் மகளுக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக 16 வயது சிறுவனை குஜராத் போலீசார் கைது செய்துள்ளனர். ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி தொடர்ந்து தோல்விகளை தழுவி வருகிறது.

 

இந்நிலையில் தோனியின் மகள் குறித்து இன்ஸ்டாகிராமில் அநாகரீகமான முறையில் பதிவிட்டதாக கூறி அகமதாபாத் அருகே சிறுவனை கைது செய்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். தனது செயலை அந்த சிறுவன் ஒப்புக்கொண்டதாக கட்ச் மேற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சவுரவ் சிங் தெரிவித்துள்ளார்.

 

இச்சிறுவனை ஜார்கண்ட் போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கிடையே தோனி மற்றும் சிஎஸ்கே வீரர்களை சமூக வலைதளங்களில் சிலர் கடுமையாக விமர்சிப்பதுடன் அச்சுறுத்தலும் விடுத்து வருகின்றனர்.

 

இதனையொட்டி தோனியின் வீடு மற்றும் பண்ணை வீட்டுக்கு காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். முன்னதாக 2007 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் தோனியின் மோசமான ஆட்டத்தால் அவரது வீட்டை ரசிகர்கள் சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Right Menu Icon