சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 16ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி..!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 16ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரொனா தொற்று காரணமாக சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.
இந்த சூழலில் மண்டல பூஜைக்காக நவம்பர் 16-ஆம் தேதி முதல் தினசரி ஆயிரம் பக்தர்களை மட்டும் அனுமதிக்க முடிவு எடுக்கப்பட்டது. மண்டல பூஜை மற்றும் மகர ஜோதி விழா நடக்கும் நாளில் மட்டும் ஐந்தாயிரம் பேரை அனுமதிப்பது என்ற வார இறுதி நாட்களில் 2000 பேர் வரை ஐயப்பனைத் தரிசிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பக்தர்களை அனுமதிப்பதற்கான முன்னோட்டமாக வரும் 16ஆம் தேதி முதல் தினசரி 250 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.






