வடிவேலு பாணியில் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து கொண்டு விழுந்த நடத்துனர்..!
சென்னை அடுத்த ஆவடி அருகே நடிகர் வடிவேலு பாணியில் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக்கொண்டு நடத்துனர் கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காமராஜர் நகர் அருகே சிற்றுந்து சென்று கொண்டிருந்த போது குறுக்கே குழந்தை ஓடி வர ஓட்டுநர் சேகர் வண்டியை உடனடியாக திருப்பியுள்ளார்.
அப்போது சிற்றுந்துள் டிக்கெட் எடுத்துக் கொண்டிருந்த நடத்துனர் ஆறுமுகம் நிலைதடுமாறி பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக் கொண்டு கீழே விழுந்துள்ளார். காயமடைந்த அவர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.







