இனி ரயில்வே டிக்கெட்டுகளை அமேசான் மூலமும் புக் செய்யலாம்..!
தனது இ காமஸ் செயலி வாயிலாக ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அமேசான் தெரிவித்துள்ளது. அமேசன் பே டேபில் டிரெயின்ஸ் எனும் பிரிவை கிளிக் செய்து ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம்.
பிஎன்ஆர் நிலவரம், டிக்கெட் டவுண்லோட், முன்பதிவு ரத்து ஆகியவற்றை மேற்கொள்ள முடியும். அமேசன் பே பலன்ஸ் வழியாக ரத்து செய்யப்பட்டதற்கான கட்டணம் உடனடியாக திரும்ப கிடைக்கும் வசதியும் உள்ளது.
துவக்க ஆஃபர் ஆக குறிப்பிட்ட காலம் வரை சேவை மற்றும் பேமென்ட் கேட் வே கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. முதன்முறையாக டிக்கெட் பதிவு செய்பவர்களுக்கு அதிக பட்சம் 100 ரூபாய் அல்லது கட்டணத்தில் 10% கேஷ்பேக் கிடைக்கும்.







