உலகில் மிக நீளமான கால்களை கொண்ட இளம்பெண் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்..!
அமெரிக்காவின் டெக்சாசை சேர்ந்த மேக்கி கியூரியின் உலகின் மிக நீண்ட கால்களை கொண்ட இளம் பெண்ணாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். 6 அடி பத்து அங்குலம் உயரம் கொண்ட 17 வயது மேக்கி கியூரியின் பெண்களில் மிக நீண்ட கால்களை கொண்டவர்.
டீன் ஏஜ் வயதினரில் மிக நீண்ட கால்களை கொண்டவர் என இரண்டு கின்னஸ் ரெக்கார்டு களை பெற்றுள்ளார். பிரிட்டன் கல்லூரிப் படிப்பு, உலகின் மிக உயரமான மாடல் ஆகியவையே தன்னுடைய இலக்குகள் என தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் உலகின் மிக நீளமான கால்களைக் கொண்ட பெண்ணாக இருந்த லிசினா மாடல் அழகி என்பதோடு கூடைப்பந்தாட்ட வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.







