மகன் இறந்த துக்கம் தாங்காமல் தாயும் உயிரைவிட்ட சோகம்..!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே காரில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட நபரின் தாயார் மகனைப் பிரிந்த சோகத்தில் இருந்த நிலையில் அவரும் உயிரிழந்தார்.
சொக்கன்குடியிருப்பை சேர்ந்த செல்வம் என்பவர் கடந்த 17ஆம் தேதி நிலத்தகராறில் காரில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சட்ட காவல் ஆய்வாளர் ஹரி கிருஷ்ணன் உட்பட 6 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மகன் இறந்த துக்கம் தாளாமல் கடந்த இரண்டு வாரங்களாக வீட்டுக்குள்ளேயே முடங்கிய தாய்உடல் நலக் குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார்.






