--- --:--:-- --

கள்ளக்காதலை தட்டி கேட்ட மனைவியை கண்மூடித்தனமாக தாக்கிய டிஜிபி..!

11

மத்திய பிரதேசத்தில் கள்ளக்காதலை தட்டி கேட்ட மனைவியை கண்மூடித்தனமாக அடித்து உதைத்த போலீஸ் டிஜிபி ஒருவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மத்தியபிரதேச காவல்துறையில் டிஜிபியாக பணியாற்றிவரும் புருஷோத்தமன் ஷர்மா என்பவரே நடவடிக்கைக்கு ஆளானவர்.

 

திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன புருஷோத்தமன் சர்மாவுக்கு திருமணத்தை தாண்டிய உறவு இருந்துள்ளதாக கூறப்படுகிறது. காதலியின் வீட்டில் இருந்த இவரை கையும் களவுமாக மனைவி பிடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த புருஷோத்தமன் மனைவியை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.

 

போலீஸ் உயரதிகாரி ஒருவரே மனைவியை அடித்து உதைக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகின.புருஷோதமன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் மத்திய பிரதேச முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon