கணவனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி..!
கோவையில் குடும்ப தகராறில் கத்தியால் குத்தி கணவனை கொலை செய்துவிட்டு எதிர்பாராத விதமாகக் கத்திப்பட்டு உயிரிழந்ததாகக் கூறி நாடகமாடிய மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர்.
வரைட்டி ஹால் பகுதியை சேர்ந்த ஃபிராங்கிளின் என்பவர் கழுத்து , வயிறு பகுதியில் காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் காய் வெட்டும் போது எதிர்பாரதவிதமாக பின்னால் நின்ற கணவன் மீது கத்தி பதிந்ததாக உயிரிழந்தவரின் மனைவி காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது குடும்ப தேவைக்காக அடமானம் வைத்த தாலியை மீட்டுத்தரக்கோரி போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கணவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு நாடகமாடிய தாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.






