--- --:--:-- --

பூஜை செய்வதாக கூறி 25 சவரன் நகைகளை கொள்ளையடித்த ஜோதிடர்..!

10

சேலத்தில் குழந்தை பாக்கியம் வேண்டி வந்த பெண்ணின் வீட்டில் இரவில் பூஜை நடத்தி 25 சவரன் நகைகளை திருடிய ஜோஷியரை போலீசார் கைது செய்தனர். சூரமங்கலத்தை சேர்ந்த மெகதாஜ் பேகம் தனது மகளுக்கு குழந்தை இல்லாததால் ஜோதிடர் பிரபு என்பவரை சந்தித்து பார்த்த நிலையில் சிறப்பு பூஜை நடத்த வேண்டும் எனக் கூறியவர் வீட்டில் இரவு பூஜை நடத்தியுள்ளார்.

 

விளக்கைஅணைத்து சாம்பிராணிப் புகை போட்டவன் ஒவ்வொரு அறையாக சென்று பூஜை செய்வதாக கூறி 25 சவரன் நகைகளை திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்த புகாரின் பிரபுவை கைது செய்த போலீசார் வைர நெக்லஸ் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Right Menu Icon