--- --:--:-- --

கோவை சரவணம்பட்டி பகுதியில் ரூ.30 லட்சம் கொள்ளை.காவல் துறையினர் விசாரணை !!!

0.3

கோவை சரவணம்பட்டி, சித்ரா நகர் பகுதியை சேர்ந்தவர் 70வயதான துரைசாமி. இவர் எல்.ஜி.பி நிறுவனத்தில், பணியாற்றி ஒய்வு பெற்ற ஊழியர்.இந்த நிலையில் துரைசாமி, கோபியில் உள்ள தனது நிலத்தை விற்று விற்பனை செய்யப்பட்ட தொகையான 30 லட்ச ருபாயை தனது வீட்டின் பீரோவில் வைத்துள்ளார்.

 

இந்நிலையில் இன்று காலை கீரணத்தத்தில் நடந்த தனது உறவினர் இல்ல திருமணத்துக்கு குடும்பத்தினருடன் சென்றுள்ளார்.திருமன நிகழ்வை முடித்து விட்டு மீண்டும் தனது வீட்டுக்கு வந்து பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிரச்சி அடைந்த துரை சாமி அதில் வைக்க பட்ட பணத்தை தேடியுள்ளார். அப்போது, பீரோவில் வைக்க பட்ட 30 லட்சம் ருபாய், மற்றும் 10 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்து அதிரச்சியடைந்தார்.

 

பின்னர்,இது குறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் அடங்கிய குழு வீட்டில் பதிவாகி உள்ள கைரேகைகளை பதிவு செய்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பற்றி விசாரணை நடத்தி விருகின்றனர்.

 

மேலும்,இந்த பகுதியில், சிசிடிவி காட்சிகள் ஏதேனும் உள்ளதா என்பதை பற்றியும் விசாரித்து வருகின்றனர். கோவையில் திருமன வீட்டிற்க்கு சென்றவரின் வீட்டில் கைவரிசை காட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon