நீரில் செல்லும் இருசக்கர வாகனத்தை கண்டுபிடித்த சேலத்தை சேர்ந்த இளைஞர்..!
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நீரிலும் இருசக்கர வாகனத்தை இயக்கி இளைஞர் ஒருவர் அசத்தியுள்ளார். இடுமண் தோட்டம் பகுதியை சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் தண்ணீரில் செல்லக்கூடிய இருசக்கர வாகனத்தை வடிவமைத்துள்ளார்.
இதன் மூலம் மக்கள் ஆற்றை கடக்கவும், ஆற்றில் சிக்கியவர்களை மீட்க முடியும் என அவர் கூறுகிறார். இதற்கு அடுத்ததாக ஹீலியம் எரிவாயு பயன்படுத்தி ஹெலிகாப்டர் போன்ற வாகனத்தை வடிவமைக்கும் முயற்சியில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.







