--- --:--:-- --

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி நேரம் கிடையாது..!

10

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி நேரம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் மக்களவை பிற்பகலில் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரொனா அச்சம் நீடிக்கும் நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மாற்றங்களுடன் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கூட உள்ளது.

 

செப்டம்பர் 14ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 1ஆம் தேதி வரை மழைக்கால தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க நாளில் மட்டும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மக்களவை கூட்டம் நடைபெறும் என்றும் மற்ற நாட்களில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 7 மணிவரை நடைபெறும் என்றும் மக்களவை செயலாளர் அறிவித்துள்ளார்.

 

சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களிலும் அவை நடைபெற இருப்பது இதுவே முதல்முறையாகும். கூட்டத்தில் பங்கேற்றவர்கள் 72 மணி நேரத்திற்கு முன்பு கொரொனா பரிசோதனை செய்து கொள்வது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கிடையே கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். முக ஸ்டாலின் பெருந்தொற்று காலத்தில் வெளிப்படையான தகவல்கள் அறிந்து கொள்வதற்கு கேள்வி நேரம் மிகவும் முக்கியமானது என தெரிவித்துள்ளார்.

 

மேலும் கேள்வி நேரத்தை ரத்து செய்வது என்பது ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளின் பங்களிப்பை நசுக்குவது ஆகும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதேபோல் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Right Menu Icon