--- --:--:-- --

5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய சிறுவனுக்கு சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக செயல்பட்ட மருத்துவமனை ஊழியர்கள்..!

2

ந்து ரூபாய் நாணயத்தை விழுங்கிய சிறுவனுக்கு சிகிச்சை அளிக்காமல் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை ஊழியர்கள் சுமார் 2 மணி நேரம் அழைக்கழித்ததாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். பெரியபோது கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் ஆறு வயது மகன் கோகுலகிருஷ்ணன்.

 

விளையாடிக் கொண்டிருக்கும்போது ஐந்து ரூபாய் நாணயத்தை விழுங்கி விட்டதாக கூறப்படுகிறது. வயிற்று வலியில் துடித்த சிறுவளை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்ற நிலையில் அங்கு சிகிச்சை அளிக்காமல் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார்கள்.

 

உடனடியாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்து சிகிச்சை அளிக்காமல் சுமார் 2 மணி நேரம் வரை அழைக்கழிக்கப்பட்டு பின்னர் தண்ணீர் அருந்துங்கள் சரியாகிவிடும் என கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

 

அங்குள்ள சமூக ஆர்வலர்கள் சிலர் இந்த தகவலை பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் கூறிஅவர் மூலம் மருத்துவமனை கண்காணிப்பாளரை தொடர்பு கொண்ட பிறகுதான் சிறுவன் கோகுலகிருஷ்ணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

 

அவசர சிகிச்சைக்கு வந்த சிறுவனுக்கு முதலுதவி கூட செய்யாத பொள்ளாச்சி அரசு மருத்துவமனையின் அலட்சியம் அங்கிருந்தவர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Leave a Reply

Right Menu Icon