பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது..!
பிரதமர் நரேந்திர மோடியின் இணையதளத்தின் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதை ட்விட்டர் நிறுவனம் உறுதி செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்காக நரேந்திர மோடி டாட் இன் என்ற பெயரில் ஒரு தனிப்பட்ட இணையதளம் செயல்பட்டு வருகிறது. இந்த இணைய தளம் சார்பில் ட்விட்டரில் ஒரு கணக்கு உள்ளது.
இந்த நிலையில் அந்த டுவிட்டர் கணக்கை முடக்கிய ஹேக்கர்கள் பிரதமர் நிவாரண நிதிக்காக பிட்காய்ன் வழியாக பணம் அனுப்புமாறு தெரிவித்தனர்.







