--- --:--:-- --

கொரோனா பாதிக்கப்பட்ட நபருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை..!

6.1

கொரொனாவால் பாதிக்கப்பட்ட நபருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து ஆசியாவிலேயே முதன்முறையாக சென்னை தனியார் மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.

 

டெல்லியை சேர்ந்த 48 வயதான நபருக்கு கொரோனாவால் நுரையீரல் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வரும் அவரது நுரையீரல் கடுமையாக பாதிக்கப் பட்டதால் அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

 

தனியார் மருத்துவமனை குழும தலைவர் டாக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து இருப்பதாக அறுவை சிகிச்சை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Right Menu Icon