வங்கி கடனுக்கு தவணைத் தொகையை செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்..!
வங்கி கடனுக்கு தவணைத் தொகையை செலுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். வாடிக்கையாளர்கள் குறித்த நேரத்தில் தவணை தொகையை செலுத்திய வங்கிகள் பேரிடர் காலத்தில் அவர்களை வாட்டி வதைக்க வேண்டும் என்று நினைப்பது மனிதாபிமானம் அல்ல என்று ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
வருமானம் நிதி ஆதாரத்தின் ரத்த ஓட்டம் தடைபட்டு நிற்பதைக் உள்மனதில் வாங்கி கடன் தவணை செலுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க வேண்டும் என்றும், நீட்டிக்கப்பட்ட காலத்தில் அபராத வட்டி போன்றவற்றை வசூலிக்கக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.
உபரி தொகையிலிருந்து மத்திய அரசுக்கு 57 ஆயிரத்து 128 கோடி ரூபாயைக் கொடுக்க ஒப்புதல் அளித்து இருக்கும் ரிசர்வ் வங்கிக்கு ஏழை, எளிய நடுத்தர மக்களுக்காக உதவி செய்ய முன்வருவது மிகப்பெரிய சவால் அல்ல என்பதை ஆர்பிஐ ஆளுநர் மனதில் கொள்ள வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.







