விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்கில் பார்க்க காத்திருப்பதாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்..!
நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்கில் காண காத்திருப்பதாக எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி மதுரையைச் சேர்ந்த ரசிகர்கள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.
கொரொனா காரணமாக ஐந்து மாதங்களுக்கு மேல் திரையரங்குகள் திறக்க முடியாத நிலையில் சூர்யாவின் சூரரைப்போற்று உள்ளிட்ட திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளன. மாஸ்டர் என்ற திரைப்படத்தை திரையரங்கில் காண விருப்பம் தெரிவித்து மதுரையைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
விரைவில் முடியும் ஊரடங்கு மாஸ்டருக்கு காத்திருக்கு திரையரங்கு என்ற வாசகங்கள் அந்த சுவரொட்டியில் இடம்பெற்றுள்ளன.







