முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டும் அரியர் மாணவர்கள்..!
அரியர் மாணவர்களின் அரசனே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து ஈரோட்டில் வைக்கப்பட்டுள்ள பேனர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதோடு ஏற்கனவே அரியர் வைத்துள்ள மாணவர்களும் அதில் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு கல்லூரி மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தநிலையில் ஈரோடு கொல்லம்பாளையத்தில் எந் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை என்ற திருக்குறளுடன் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து பேனர் வைக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





