மதுரையில் நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவியை புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி எனக்கூறி ஒட்டப்பட்ட போஸ்டர்..!
மதுரையில் நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவை புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி எனக்கூறி போஸ்டர் ஒட்டப்பட்டு இருப்பது விவாதப் பொருளாகி உள்ளது.
நடிகர் விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் திருமணமாகி இருபது ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் நலத்திட்டங்கள் வழங்கியும் அன்னதானம் வழங்கியும் வருகின்றனர்.
இந்நிலையில் மதுரையில் நடிகர் விஜய்யின் உருவப்படத்தை எம்ஜிஆர் போன்று சித்தரித்து அவரது மனைவி சங்கீதாவின் உருவப்படத்தை ஜெயலலிதாவாக சித்தரித்தும் புரட்சித்தலைவர் விஜய் என்றும் புரட்சித்தலைவி சங்கீதா என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.






