--- --:--:-- --

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருந்த இளைஞருக்கு அறிவுரை கூறிய நடிகர்கள்..!

9

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் சாலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருந்த இளைஞருக்கு நடிகர்கள் ரியாஸ் கான் மற்றும் பப்லு பிரித்விராஜ் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

 

கிழக்கு கடற்கரை சாலையில் கைக்குழந்தையுடன் வந்த காரில் சாலையை கடக்கும் போது மதுபோதையில் பைக் ஓட்டி வந்த இளைஞர் கார் மீது மோதினார். குடிபோதையில் வந்த இளைஞர் காரில் வந்த தம்பதியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

அப்போது அந்த வழியாக காரில் வந்த நடிகர்கள் ரியாஸ் கான் மற்றும் பிரித்திவிராஜ் ஆகியோர் தகராறு செய்து கொண்டிருந்த இளைஞரை சமாதானப்படுத்தி மதுபோதையில் வாகனம் ஓட்டக் கூடாது என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

 

குடிபோதை ஆசாமியிடம் மாட்டிக்கொண்டு பிடித்த தம்பதி நடிகர்களுக்கு நன்றி கூறிவிட்டு சென்றனர்.

Leave a Reply

Right Menu Icon