கேரளாவில் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க உதவிய மோப்ப நாய்க்கு கிடைத்துள்ள அரசு பணி..!
மூணாரில் ஏற்பட்ட நிலச்சரிவில் தனது எஜமானர்களை கண்டுபிடிக்க தொடர்ந்து முயற்சி மேற்கொண்ட குவி என்ற நாய்க்கு தற்போது அரசு பணி கிடைத்துள்ளது. மூணாறு நிலச்சரிவில் பலர் உயிரிழந்த நிலையில் தன்னை வளர்த்த எஜமானர் குடும்பம் மண்ணில் புதையுண்ட நிலையில் அவர்களை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் அவர்கள் வளர்த்த நாயான குவி ஈடுபட்டது.
இந்த முயற்சியில் தன்னோடு அதிகம் விளையாடிய எஜமானரின் குடும்பத்தை சேர்ந்த தக்ஷிணா என்ற இரண்டரை வயது சிறுமியும் குவி கண்டுபிடித்தது.
இந்த நிலையில் இடுக்கி மாவட்ட மோப்ப நாய் படைப் பிரிவின் காவலராக அஜீத் மாதவன் குவியை காவல் துறையில் மோப்ப நாய் படை பிரிவில் சேர்க்க அனுமதி கேட்டு வந்த நிலையில் தற்போது அனுமதி கிடைத்துள்ளது.
இதையடுத்து நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு சென்று அஜீத் மாதவனின் பெட்டிமுடி பகுதி மக்கள் குவியை ஒப்படைத்தனர். மோப்பநாய் படைப் பிரிவில் சேர்க்கப் பட்டுள்ள குவிக்கு 10 நாட்கள் முறைப்படி பயிற்சி அளிக்கப்பட்டு பின்னர் மோப்பநாய் படை பிரிவில் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







