--- --:--:-- --

போலீசாரின் வாக்கி டாக்கியைப் பறித்து உடைத்த நபர்..!

13

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே ரோந்து போலீசாரின் வாக்கி டாக்கியைப் பறித்து சாலையில் சிதறு தேங்காய் போன்று உடைத்து ஆசாமியை போலீசார் கைது செய்தனர். வேண்டர் பேட்டை பகுதியில் அரைகுறை ஆடையுடன் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் ஒருவர் சுற்றி திரிவதாக கிடைத்த தகவலின்பேரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் சதீஷ் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளார்.

 

இதனை நோட்டமிட்ட அந்த நபர் காவலரை வழிமறித்து சண்டையிட்டு வாக்கிடாக்கியை பறித்ததோடு மட்டுமல்லாமல் அதனை நடுரோட்டில் வைத்து ஆவேசமாக சிதறு தேங்காய் உடைத்து நொறுக்கினார்.

 

இந்த வீடியோ வைரல் ஆன நிலையில் காவலரின் வாக்கி டாக்கி அடித்து உடைத்த பூங்காவனம் என்பவனை கைது செய்த போலீசார் அவரை சென்னையில் உள்ள மனநல மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பூங்காவனம் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடிப்பதாக கூறப்படுகிறது.

 

இதனிடைய பணியின்போது கவனக்குறைவாக செயல்பட்டு வாக்கிடாக்கியை பறி கொடுத்ததாக பலரிடமும் விளக்கம் கேட்டு விசாரணை நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon