--- --:--:-- --

சீனாவில் கடலில் தத்தளித்த சிறுவனை போராடி காப்பாற்றிய இரண்டு குதிரை உயிரிழப்பு..!

4

சீனாவில் கடலில் சிக்கித் தவித்த சிறுவனை போராடி காப்பாற்றிய இரண்டு குதிரைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜிம்ஸியாங் மாகாணத்தில் கடந்த மாதம் 12 வயது சிறுவன் கடலில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அலையில் அடித்துச் செல்லப்பட்டார்.

 

இதனையடுத்து அங்கிருந்த குதிரைப் பயிற்சி உரிமையாளர் தன் இரண்டு குதிரைகளையும் கடலில் இறக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுவனை பத்திரமாக மீட்டார்.

 

இந்நிலையில் அந்த இரண்டு குதிரைகளுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து அதற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த குதிரைகளுக்கு நுரையீரல் தொற்று மற்றும் காலில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டதை அடுத்து குதிரை உயிரிழந்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon