--- --:--:-- --

“கட்சி சார்பற்ற எம்எல்ஏவாக செயல்படுவேன்”!! என்னை நீக்கியது ஜனநாயக படுகொலை.. உதயநிதி தான் காரணம்..! கு.க.செல்வம் அதிரடி!!

14

ட்டப்பேரவையில் கட்சி சார்பற்ற எம்எல்ஏவாக செயல்படப் போவதாக திமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட கு.க.செல்வம் தெரிவித்துள்ளார். தம்மை கட்சியில் இருந்து நீக்கியது ஜனநாயக படுகொலை என்றும், உதயநிதி ஸ்டாலின் செயல்பாடுகளால் அதிருப்தியில் மேலும் பல எம்.பி., எம்எல்ஏக்கள் உள்ளதாகவும் கு.க.செல்வம் தெரிவித்துள்ளார்.

 

ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏவாக இருந்த கு.க.செல்வம், கட்சி மேலிடம் மீதான அதிருப்தியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை சந்தித்ததைத் தொடர்ந்து பாஜகவில் இனணயப் போவதாகவும் கூறப்பட்டது. இதனால் அவரை கட்சியில் இருந்து சஸ்பென்ட் செய்த திமுக மேலிடம், கட்சியை விட்டு ஏன் நீக்கக் கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

 

இதற்கு கு.க. செல்வம் கொடுத்த விளக்கம் திருப்தி இல்லை எனக் கூறி அவரை கட்சியிலிருந்து டிஸ்மிஸ் செய்வதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவிப்பு வெளியிட்டார். இதனால் கு.க. செல்வம் பாஜகவில் ஐக்கிய மாவார் என்று எதிர்பார்க்கப்ட்டது. ஆனால் அதில் சில சட்டச் சிக்கல்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

 

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட கு.க.செல்வம், தனது எம்எல்ஏ பதவியை தக்க வைக்க வேண்டுமெனில், சட்டப்பேரவையில் கட்சி சார்பற்றவராக செயல்பட மட்டுமே முடியும் என்றும் வேறு கட்சியில் இணையும் பட்சத்தில் எம்எல்ஏ பதவி பறிபோகும் என தெரிய வந்துள்ளது. மேலும் திமுக கொறடா உத்தரவுக்கு கட்டுப்பட்டே ஆக வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இதனால் பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணையாமல் பாஜக ஆதரவாளராக இருக்க கு.க. செல்வம் முடிவெடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

 

உதயநிதி தான் காரணம்

 கு.க.செல்வம் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில், என்னை நம்பி வாக்களித்த ஆயிரம் விளக்கு தொகுதி மக்களின் நலனுக்காக கட்சி சார்பற்ற எம்எல்ஏவாக எனது பணிகள் தொடரும் என குறிப்பிட்டுள்ளார்.

 

இதைத் தொடர்ந்து கு.க.செல்வம் அளித்துள்ள பேட்டியில் தம்மைகட்சியில் இருந்து நீக்கியது ஜனநாயக படுகொலை என்றும், தம் மீதான குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

 

மேலும் உதயநிதி ஸ்டாலினின் தலையீடு தான் பிரச்னைக்கு காரணம் என்றும் திமுகவில் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் தன்னுடன் தொடர்பில் உள்ளதாக தெரிவித்துள்ள கு.க.செல்வம்,
தற்போது எந்த கட்சிக்கும் செல்ல விரும்பவில்லை என்றும் தமக்கு யார் வாய்ப்பு கொடுக்கிறார்களோ அந்தக் கட்சி சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுவேன் என்றும் கு.க.செல்வம் தடாலடியாக தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Right Menu Icon