மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு..!
மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை நடப்பாண்டில் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
தமிழக அரசு மற்றும் திமுக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தாக்கல் செய்த மனுவில் ஒபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்த புதிய சட்ட வரையறைகளை உருவாக்கவும் அடுத்தாண்டு முதல் அதனை நடைமுறைப்படுத்தும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் மாணவர் நலன் கருதி சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நடப்பாண்டு அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு நீதிபதி நாகேஸ்வரராவ் அமர்வில் பன்னிரண்டாவது வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.






