சொத்து தகராறில் மகனை சுத்தியலில் அடித்து கொன்ற தந்தை சரண்..!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே சொத்து தகராறு காரணமாக சொந்த மகனையே சுத்தியால் அடித்து கொன்ற தந்தை போலீசில் சரணடைந்தார். பெண்டுர்தி கிராமத்தை சேர்ந்த வீர ராஜு மற்றும் அவரது மகன் ஜல ராஜு இடையே அடிக்கடி சொத்து தகராறு காரணமாக சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை இருவருக்குமிடையே மீண்டும் இந்தப் பிரச்சினை எழுந்ததால் ஆத்திரம் அடைந்த வீரராஜு அருகிலிருந்த சுத்தியை எடுத்து மகனின் தலையில் சரமாரியாக தாக்கினார். தலையில் பலத்த காயமடைந்த மகன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இதனை அறிந்த தந்தை உடனடியாக அங்கிருந்த காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். சம்பவ இடத்தை பார்வையிட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






