10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு இன்று 9 மணிக்கு வெளியீடு..!
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. தமிழக அரசின் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தேர்வு முடிவுகளை www.tn results.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in தெரிந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளது/ மேலும் பள்ளிகளில் பதிவு செய்த கைபேசி எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். மதிப்பெண்கள் சார்ந்த குறைகள் இருப்பின் வரும் 17ம் தேதி முதல் 25-ம் தேதி வரை பள்ளி தலைமை ஆசிரியர் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
பொது முடக்கம் காரணமாக பத்தாம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்து ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில் மதிப்பெண்கள் வெளியிடப்பட உள்ளன.







