--- --:--:-- --

டிக் டாக்கில் பழகி சிறுமியை ஏமாற்றி கடத்தி சென்ற இரண்டு இளைஞர்கள்..!

2

டிக் டாக் செயலி மூலம் ஏற்பட்ட பழக்கத்தை பயன்படுத்தி மயிலாடுதுறையில் சிறுமியை கடத்தி சென்ற இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பாட்டு பாடுவதில் ஆர்வம் கொண்ட மயிலாடு துறையைசேர்ந்த 16வயது சிறுமி தான் பாடிய பாடல்களை டிக் டாக் செயலியில் பதிவேற்றம் செய்து வந்துள்ளார்.

 

அதை பார்த்து அரக்கோணம் இளைஞர் ஒருவர் இந்த சிறுமியுடன் பேசி பழகி உள்ளார். இவர்களின் நட்பு நாளடைவில் காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆறாம் தேதி சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

 

முதற்கட்ட விசாரணையில் அரக்கோணத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் அந்த சிறுமியை ஏமாற்றி கடத்தி சென்றதாக தெரியவந்ததையடுத்து கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய காவல்துறை அரக்கோணம் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon