--- --:--:-- --

லஞ்சம் கேட்ட போலீஸ்.நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த லாரி டிரைவர் !!!

லஞ்சம் கேட்ட போலீஸ்.நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த லாரி டிரைவர் !!!

கோவை சரவணம்பட்டி சோதனைச்சாவடியில் போக்குவரத்து போலீசார் லாரி ஓட்டுனர் விஜயகுமார் என்பவரை முறையான ஆவணம் கொடுத்தும், இ-பாஸ் இருந்தும் அபராதம் விதித்தாகவும்,இது குறித்து கேட்டதற்கு போலீசார் தன்னை தாக்கினார் எனவும், தாக்கியதை கண்டித்து, தட்டப்பயிறு லோடுடன் ஆட்சியர் அலுவலகம் முன்பு லாரியை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.பின்னர், போலிசார் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

 

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் கர்நாடக மாநிலம் மைசூரை அடுத்துள்ள நஞ்சன்கூடு எனும் இடத்தில் இருந்து, கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டத்திற்கு அத்தியாவசிய உணவு பொருளான தட்டப்பயிறு மூட்டைகளை தனது லாரியில் ஏற்றி வந்துள்ளார்.வரும் வழியில் சரவணம்பட்டி சோதனைச்சாவடியில் போக்குவரத்து போலீசார் நிறுத்தி 300 ரூபாய் இலஞ்சம் கேட்டதாகவும்,அதற்கு ஓட்டுனர் எல்லா ஆவணங்களும் சரியாக இருப்பதாக கூறியுள்ளார்.

 

ஆனால், ஓட்டுனர் யூனிபார்ம் இல்லை என 700 ரூபாய் அபராதம் விதித்து அதை வசூலித்தது மட்டுமின்றி,தன்னை தாக்கியதாக குற்றம் சாட்டினார். மேலும், சரவணம்பட்டியில் இருந்து நேராக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு லாரியை நிறுத்தி தன்னை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும் வரை நகர போவதில்லை என நின்று விட்டார்.

 

அதன் பின்னர் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொள்வதாக தெரிவித்ததை அடுத்து புறப்பட்டு சென்றார்.இச்சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon