--- --:--:-- --

கடலூர் அருகே இரு தரப்பிடையே பயங்கர மோதல்..! வீடு, படகு, வாகனங்களுக்கு தீ வைப்பு..! நள்ளிரவில் பற்றியெறிந்த மீனவ கிராமம்!!

25

கடலூர் அருகே தாழங்குடா மீனவ கிராமத்தில் உள்ளாட்சி தேர்தல் முன்விரோதத்தில் முன்னாள் ஊராட்சி தலைவரின் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையே பயங்கர மோதல் வெடித்தது. நள்ளிரவில் நடந்த மோதலில், வீடுகள், மீன்பிடி படகுகள், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் மீனவ கிராமமே தீக்கா டாக பற்றியெறிய, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

கடலூர் அருகே உள்ளது தாழங்குடா என்ற மீனவ கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த மாசிலாமணி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். கடந்த உள்ளாட்சி தேர்தலில் மாசிலாமணியின் மனைவியும், மதியழகன் என்பவரின் மனைவியும் போட்டியிட்டனர். இதில் மதியழகன் மனைவி சாந்தி வெற்றி பெற்றார். தேர்தல் முடிந்தது முதல் மாசிலாமணி தரப்புக்கும், மதியழகன் தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்து கடந்த ஏப்ரல் மாதம் இரு தரப்பிடையே பெரும் மோதலும் நடந்தது.

 

இந்நிலையில் மாசிலாமணியின் தம்பியான மதிவாணன், நேற்று இரவு 9 மணி அளவில் தாழங்குடா அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற போது ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களால் அவரை வழிமறித்து தாக்கியது.

இந்த கும்பலை பார்த்ததும் மதிவாணன், மோட்டார் சைக்கிளை நடுரோட்டில் போட்டுவிட்டு ஓடினார். உடனே அந்த கும்பல் அவரை விரட்டிச்சென்று சரமாரியாக தாக்கியது. உயர் பிழைக்க தப்பியோட முயன்ற மதிவாணனை ஓட, ஓட விரட்டி கொன்றது அந்த கும்பல் . மதிவாணனை கொன்றது மதியழகனின் ஆட்கள் என்று தெரிய வந்ததும், மாசிலாமணி தரப்பினர் ஆத்திரமடைந்தனர்.
தாழங்குடா கிராமத்தில் மதியழகன் தரப்பினரின் வீடுகளை அடித்து,நொறுக்கி சூறையாடியதுடன் தீ வைப்பிலும் ஈடுபட்டனர்.
மேலும் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களுக்கும் தீ வைத்தனர்.

 

இதையடுத்து மதியழகன் தரப்பினரும் வன்முறையில் இறங்கியதால் இருதரப்பினருக்கும் பயங்கர மோதல் வெடித்தது. தாழங்குடா கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள், வலைகள் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் நேற்று இரவு முழுவதும் தாழங்குடா கடற்கரை கிராமமே தீக்காடாக பற்றி எரிந்தது.

 

பயங்கர மோதல் சம்பவத்தை தொடர்ந்து கடலூர் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீ அபினவ் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்ட நிலையில் தற்போது பதற்றம் தணிந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மோதல் தொடர்பாக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் உத்தரவிட்டுள்ளார்.மோதல் தொடர்பாக 60-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மோதலில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து வருவாய் துறையினர், மற்றும் மீன்வளத்துறையினர் கணக்கெடுக்கும் பணியை துவங்கியுள்ளனர்.நள்ளிரவில் தாழங்குடா மீனவ கிராமத்தில் நடைபெற்ற கொலை, தீ வைப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon