--- --:--:-- --

நிலவில் தரையிறங்கியுள்ள சந்திராயன்-2 ரோவர் கருவி..!

23

சந்திரயான் இரண்டில் அனுப்பப்பட்ட ரோவர் கருவி எந்த பாதிப்பும் இன்றி நிலவின் மேற்பரப்பில் அப்படியே இருப்பதாக சென்னையை சேர்ந்த மின்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

 

கடந்த ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 இலிருந்து லேண்டர் பாகத்தை தரையிறக்கும் முயற்சி தோல்வியடைந்த நிலையில் அதன் உடைந்த பாகங்களை சென்னையை சேர்ந்த சண்முகப்பிரியன் என்னும் மின் பொறியாளர் கண்டுபிடித்து தெரிவித்தார்.

 

இந்நிலையில் இஸ்ரோவிற்கு அவர் அனுப்பிய மின்னஞ்சலில் கடந்த மே மாதத்தில் நாசா வெளியிட்ட நிலவின் மேற்பரப்பு புகைப்படங்களை ஆராய்ச்சி செய்ததுபொது  லேண்டரில் இருந்த பிரக்யான் எனும் ரோவர் கருவி சேதம் இன்றி தரையிறங்கி இருப்பதையும் மேலும் சில மீட்டர் தூரத்திற்கு பயணம் செய்து இருப்பதையும் காண முடிந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த கருவியில் பூமிக்கு தகவல் அனுப்பும் திறன் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon