ஆகஸ்ட் மாத ரேஷன் பொருட்களுக்கு டோக்கன் விநியோகம்..!
ஆகஸ்ட் மாத ரேஷன் பொருட்கள் 1, 3, 4 ஆகிய தேதிகளில் வினியோகம் செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாத ரேஷன் பொருட்களுக்கு இந்த தேதிகளில் வீடு தேடி சென்று ஊழியர்கள் தர வேண்டும்.
ஒரு நாளைக்கு 225 குடும்பங்களுக்கு மிகாமல் பொருட்களை வழங்க ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டோக்கனில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பொருட்கள் வழங்கப்படும். ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்களை முறையாக விநியோகம் செய்ய வேண்டும்.
ரேஷன் கடைகளுக்கு ஏழாம் தேதிக்கு மேல் மாற்று நாளில் பின்னர் விடுமுறை அளிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆகஸ்டு 7ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று ரேஷன் கடை செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.






